என்னதான் மனதை மாற்ற முயன்றாலும் உன்னையேதான் மனது நாடுகிறது ....எவ்வளவோ தடுத்து கேட்டு அதட்டி பார்த்துவிட்டேன் கேட்கமாட்டேன் என்கிறது மனம்....என்ன செய்யச் சொல்கிறாய் ...
எனக்குத் தெரியும் நான் செய்வது எல்லாமே தான்தோன்றித்தனம், சுயநலம் எல்லாமே ....என்ன செய்வது நான் எனக்காக வாழவேண்டும் என்று உன்னை பார்த்தபின்புதான் ஆசைப்பட்டேன்....அதுவும் உன்னுடன், உனக்காகவே வாழ்ந்து தேய்ந்துவிடவேண்டும்.....
எனக்கென்று வாழ்கை இருக்கிறது.....அதனுள் எல்லாமே என்னை நம்பி அந்த உயிரும் இருக்கிறது....நான் வேண்டாம் என்று ஒதுக்கவில்லை.....நீயும் வேண்டும் என்றுதான் கேட்டேன்....அதுவும் எனக்காக வேண்டும் ....எனக்கே எனக்காக....
உன்னுடைய வாழ்கைச் சூழ்நிலை எனக்கு தெரியாமல் இல்லை ......தெரிந்துதானே உன்னிடம் வந்தேன்.....ஆனாலும் உன்னைத்தானே நாடுகிறது மனம்....
உன்னுடைய வாழ்க்கைக்கு என்னால் எந்த இடையூறும் வராது....எந்த சூழ்நிலையிலும் ......அதை தெரிந்து கொண்டுதான் என்னை உன்னுடன் பிணைத்துக்கொள்ள இவ்வளவு போராட்டம்.....
வாழ்க்கைத்துணை அவசியம்தான்.....ஆனால் அதுவே எனக்கு முரண்பாடு எனும்போது என்னைச் சகிக்க முடியாத ரணம் என்னுள் சாட்டை அடியாய் ......
நான் பழிவாங்கவும் இல்லை...பாபத்தைச் செய்யவும் இல்லை என்னை நம்பியவர்களை கை விடவும் இல்லை.....அவர்களுக்கான கடமைகள் அவர்களுக்கு அதில் எல்லாமே அடக்கம்....
ஆனால் என்னால் உன்னைத்தவிர அவர்களை ஒத்துக்கொள்ள முடியவில்லை....இனிமேலும் முடியுமா என்பது கேள்வி....
இனி செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை ....ஊமையாய் இருந்துவிட்டு போகிறேன் ......எனக்கு இது தேவையான ஒன்றுதான் .....அனுபவித்துவிட்டுப்போகிறேன்
அமைதிக்கு மறுபெயர் ஊமைதானே.....
என் செல்வங்களின் முன்னேற்றம் எனக்கு இனிமேல் உறுதுணை ....
முடிந்தால் கைகுடுங்கள்.....
உனக்கான வாழ்கை முறையை நான் தடுக்கவில்லை....தடுக்கவும் விரும்பவில்லை ......அதில் என் தலையீடு நிச்சயமாக இருக்காது .....எனக்காக வருந்தாதே .......எனக்கான பாதையை நான் நிர்ணயிதுக்கொண்டுவிட்டேன் என்றுதான் தோன்றுகிறது....பாதை நிறைய முட்கள்...கற்கள் ....குத்தும் கிழிக்கும் என்று எனக்கு தெரியும் .......எனக்கு அது ஒன்றே போதும்...
அடிபட்டல்தானே வாழ்க்கை .......
No comments:
Post a Comment