மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா
*****
வாழ்கை என்றால் ஆயிரம் இருக்கும்
வாசல் தோறும் வேதனை இருக்கும்
வந்த துன்பம் எதுவென்றாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை ...
எதையும் தாங்கும்
இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும்
அமைதி பிறக்கும் .......
*******
ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம் பாடி
நாளை பொழுதை இறைவனுக்களித்து
நடக்கும் வாழ்வில் அமைதியை தேடு ...
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு
******
No comments:
Post a Comment