Friday, June 19, 2009

என் உயிருக்கு ஓர் நம்பிக்கை கடிதம்

ஒவ்வொரு நாளின் முடிவில்லா
தருணங்களில்
உன் ஒவ்வொரு அசைவும்
உணர்வாய் என்னை துளைக்கிறது
கேள்விகளால்......
*******
எனக்காக பதிலாய் நீ இருப்பாய்
என்றுதான் உன்னை சரணடைந்தேன்
நீயே கேள்வியாய் இருக்கிறாய் எனும்போது
தடுமாறித்தான் போகிறேன்
எனக்கான இடத்தை தேடி...
********
நான் தேடும் ஒவ்வொன்றும்
உனக்கான பதிலாக நான்
இருக்கமாட்டேனா என்பதுதானே
நீயோ கேள்விக்குள்ளேயே பதிலைத்
தேடுகிறாய் ...
********
எல்லோருக்கும் போராட்டம் வாழ்கையின்
ஒரு பகுதி
உனக்கு போராட்டமே வாழ்கையாய் போனது
விதியின் விளையாட்டுத்தான்......
*******
உன்னை மீறி ஒவ்வொன்றும்
நடக்கும்போது
வாடிப்போன உன் முகத்தை
கையில் ஏந்திக்கொள்ள தோன்றுகிறது
*******
உன் தோளோடு தோள் சேர
நான் இருக்கும் போது
சில வேளைகளில் உன்னை
மறந்து துடிப்பது ஏனோ....
******
உனக்கான வலியை தாங்கிக்கொள்ள
எம் இதயம் இருக்கும்போது
உன்னை மறந்து உன் இதயம்
எதை தேடுகிறது.....
******
வெறும் கற்பனைக்கு அல்ல என் காதல்
காலம் தோறும் கைப்பிடிக்கத்தான்
என் காதல்...
சுகத்துக்கல்ல என் காதல்
உன் வாழ்நாள் முழுதும் தாங்கும்
வலியாய் இருக்கும் என் காதல்....
கைப்பிடிக்கவல்ல என்காதல்
கரை சேரவும்தான் என் காதல்....
காலங்களைத்தாண்டி நம் காதல்
ஜெயித்துக்கொண்டே இருக்கும்....
*******




No comments:

Post a Comment