Saturday, June 6, 2009

மனவிலாசம்

ஒவ்வொரு முறையும்

என்னை புரிந்து கொள்ளாமல்

என் எதிர்பார்புகளை

நீ தெரியாமல் விலக்கும்போது

தடுமாறித்தான் போகிறேன் நானும் ....

******

கோப பிரவேசங்களில்

என் கொடுஞ் சொற்கள்

உன்னை தாக்கும் வேகம் தாளாமல்

நீ சுருளும் போது தாங்கிப் பிடிக்க

துடிக்கிறது என்மனம்

ஆனால் புரிந்து கொள்ளாமல்

விலகிப்போகிறாயே என் செய்வேன் நான் ...

*******

உனக்கான கோபம் மாதிரியே

எனக்கான கோபமும் ....

உனக்கான உணர்வுகள் மாதிரியே

எனக்கான உணர்வுகளும்.....

உனக்காக ஆறுதல் மாதிரியே

எனக்கான ஆறுதல் எங்கே என் அன்பே ....

******

ஓடி வந்து உன் கைகளில்

அடைக்கலமாகும் தருணங்களில்

நானிருக்க.....

கடைக்கண் பார்வையாய்

என்னை பரிதவிக்க விட்டு போவதென்ன

என் அன்பே ......

******

எல்லா நிமிடங்களும்

கடந்து போன பின்பு

பறந்து போன ஏக்கங்களை

மேற்கோள் காட்டி என்னை

தவிக்க வைத்து போவதென்ன என் அன்பே...

******

ஒவ்வொரு முறையும்

நீ கேட்பாய் என்று எதிர்பார்த்த

நிமிடங்களை நான் கண்ணிமைக்கும்

நேரத்தில் தவறவிட்டு

என் கோப தருணங்களில்

நீ கசங்கிய கவிதையாய்

மாறும்போது நான்

நொறுங்கித்தான் போகிறேன்

******

ஆனாலும்

என் சுவாசக்காற்றாய்

நீ இருக்கையில்

என் சுவாசத்தை நான் எப்படி

அடைத்துக்கொள்ள முடியும் ....

உயிர் வாழ முடியும் ....

*****

என் இயக்கமும் நீதான்

இயக்குபவளும்

நீதான்

எனக்கான காதலும் நீதான்

எனக்கான ஜீவனும் நீதான்

எனக்கான வெற்றியும் நீதான்

எனக்கான கோபமும் நீதான்

எனக்கான ஆறுதலும் நீதான்

எனக்கான காமமும் நீதான்

எனக்கான காவலும் நீதான்

யாதுமாகி யதுமாகியும் நீதான்

என் அன்பே

*******

உன்னில் ஒன்றி

உனக்கான ஏக்கமாய்

நானிருக்க

விரிந்த உன் இதயம் போல்

உன் கரங்களில் அடைக்கலமாகும்

இந்த வழி தவறிய ஆட்டுக்குட்டிக்கு

காலம் எப்போ வரும் கண்ணே

வழி மாறி விழி நீரோடு காத்திருக்கிறேன்

உனக்காக

தாய்மடியாய் உன் மென்மைக்காக ......

*********

No comments:

Post a Comment