Wednesday, May 27, 2009

காதலியே...

புன்னகையாய் உன் முகம்
மாறும்போது எவ்வளவு
அழகாக இருக்கிறது .....
மொட்டவிழ்ந்த மலர்போல் ....
மலர்ந்த ரோஜா போல் .....
புல்லிதழின் பன்னீர் துளி போல்...
வசீகரமாக இருக்கிறது ....
*****
உன் முகம் பார்த்து சிரிக்கும்
போது உன் கண்களும் ஆயிரம்
கதைகள் சொல்கிறது ......
எனக்கான நிகழ்வுகளை....
என்னில் இருக்கும் உன் இதயத்தை ....
******
உன்னைத் தேடியே என் இதயம்
வருகிறது.....
உன்னை நினைத்தே என் இதயம்
வாழ்கிறது....
உன்னையே என் மனம் நாடுகிறது....
வார்த்தை மாறாமல் உன்
காதலை
என்னிடம் சொல்லிவிடு
******
கனவுகளை கலைக்க
விரும்பவில்லை
உன்னையே அனுதினமும்
நினைத்து....
உன்னையே ஆராதித்து
உன் நிழலாய் என் கண்கள்
பார்க்கையில்
கை தட்டி எழுப்பும்
ஓசைகள் கூட
என்னில் உன் நினைப்பை
மற்ற விரும்புவதில்லை ......
********
நீ கடந்துபோன
கால்தடங்களை எல்லாம்
தொட்டுப்பார்கிறேன்
என் கைகளால்
உன் வெப்பம் உணர்கிறேன்....
என் அருகில் நீ இருப்பதுபோல் ....
*******

Friday, May 22, 2009

வரம்

ஒவ்வொரு முறையும்
நீ
என்னைத் தாண்டிச் செல்லும்போது உன்
மௌன குரலாக ஏதோ
என்னில் உணர்வை
ஏற்படுத்தி விட்டு போகிறாய்
*****
என்னவென்று
அறிய முற்பட்டாலும்
என்னில் இனிக்கும் அந்த
நினைவுகளை
உள்நோக்கி சோதனை
செய்து
உன் மௌனமான
உணர்வுகளை
காயப்படுத்த
விரும்பாமல் விட்டுவிடுகிறேன்
****
சில நேரங்களில்
உன் மௌனமே என்னை
மெளனமாக இருக்கச்செய்து
விடுகிறது
நீ
என்னவென்று விரும்பி
கேட்டாலும்
என்னால் ஒன்றுமில்லை
என்றுதான் சொல்லமுடிகிறது ....
****
என் உணர்வு உன்னைத்தாக்கி
காயப்படுமே என்று
என்னில் அடக்கமாகிறேன்
உன் புன்னகையால்
சமாதானம் ஆகிறேன்....
*****
அந்த என் திருப்தியற்ற
என் பதிலால்
நீ
சமாதனம் ஆகாமல்
என்னில் ஒரு தாக்கத்தை
ஏற்றிக்கொண்டே இருக்கிறாய்
என் நினைவில்
சோக முகம் காட்டி
திரும்ப திரும்ப என்னில்
வந்துகொண்டே இருக்கிறாய்
*****
உன்னை சிரிக்க வைக்கவே
எனக்கு ஆசை
உன்னில் நான் சிரித்தபடி
இருக்கவே ஆசை
உன் மடி சுகம் தேடி ஆறவே
ஆசை
உன்னில் கரைந்து
மறைந்து விடவே ஆசை
****
எனக்கான பதிலாய்
நீ இருக்கிறாய்
உனக்கான உணர்வாய்
நான் இருக்கிறேன்
உன்னில் நான்
உணர்வாய் கலந்து
உயிராய் கரைந்து
என்னை தொலைத்து
கொள்ளவே ஆசை
****
வேண்டும் வரம்எனக்கு
வேண்டும்
தவறாமல் தருவாய்
என்ற மனநிறைவோடு
முதல் புள்ளியை வைக்கிறேன்
கோலம் போடுவது உன்கையில்
என் மனமே.....!
********************************







Thursday, May 14, 2009

மௌனம்

சந்தோசமாக இருக்கிறது உனக்கான
இடத்தில் நானும் எனக்கான
இடத்தில் நீயும் இருப்பதைப் பார்த்து
சரியான இடத்தில் உட்கார்ந்து இருப்பது
சந்தோசமாக இருக்கிறது.....
*******
உனக்கான நினைவுகளை
பதித்துக்கொண்டு அந்த
மரத்தடி நிழலில்
நிற்கும்போது
கடந்து செல்லும் காற்றை
கொஞ்சம் நிறுத்தி
என் இதழ்களால் உன் பெயரை
உச்சரித்து
தென்றல் வருடும் காற்றாய்
உன்னிடம் அனுப்பினேன் .....
******
வந்திருக்கும் உன்னிடம்
என் சுவாசத்தைச்
சுமந்துகொண்டு...
வந்திருக்கும் உன்னிடம்
என் காதலை
தாங்கிக்கொண்டு....
என்ன பதிலை சொல்லி அனுப்பினாய் ....
கொஞ்சம் வருடும் காற்றில்
என் காதை வைத்து கேட்கிறேன் ......
******
உன்குரல் கேட்கிறது ....
என்ன சொல்கிறாய் என்று கேட்கும்
நிலையில் இல்லை என்மனம்
நான் கேட்டது உன்குரலைத்தான்
அது ஒன்றே எனக்கு போதும் ......
****
மௌனமாய் நீ இருந்தாலும்
மயிலிறகாய் உன் மௌனமொழி
என்னை வருடிவிட்டுத்தான் செல்கிறது
*****
உனக்காக காத்திருக்கும்
ஒவ்வொரு நொடியும்
என்னை வாட்டிவிட்டுத்தான்
போகிறது ....
*****
என்ன செய்வது
வாடிய இந்த
பயிருக்கு கொஞ்சம்
ஜீவத்தண்ணீரை
ஊற்றும் வள்ளலாக
நீ
இருக்கமாட்டாயா ....
*****
ஒவ்வொரு முறையும்
தடுமாறித்தான் போகிறேன்
உன்னை பார்க்கும்போதெல்லாம்
உன் கோபத்தருணங்களில் கூட
உன் முகம் பார்த்து
தடுமாறித்தான் போகிறேன்.....
*****