எங்கே நிம்மதி எங்கே நிம்மதி
அங்கே எனக்கோர் இடம் வேண்டும்
அங்கே எனக்கோர் இடம் வேண்டும் ...
******
எனது கைகள் மீட்டும் போது
வீணை அழுகின்றது
எனது கைகள் தழுவும்போது
மலரும் சுடுகின்றது
என்ன நினைத்து என்னை படைத்தான்
இறைவன் என்பவனே !
கண்ணை படைத்தது
பெண்ணை படைத்தாய்
இறைவன் கொடியவனே .....
******
பழைய பறவை பறந்த போது
பறந்து வந்ததே
புதிய பறவை எனது நெஞ்சை
கவர்ந்து போனதே
இன்று மட்டும் அமைதி இருந்தால்
வணங்குவேன் தாயே...!
இன்று மட்டும் அமைதி இருந்தால்
உறங்குவேன் தாயே .....!
*****
No comments:
Post a Comment