இன்னும் எத்தனை முறைதான்
என்னை தவிக்க விடுவாய்....
உன்னை ஏதோ ஒரு விதத்தில்
நெருங்கிவிட்டேன் என நினைக்கும்போது
எண்ணச் சிதறலாய் ஏதோ ஒன்று
என்னை உன்னிடமிருந்து தள்ளி
வைத்து தவிக்கவிடுகிறதே கண்மணி ....
*****
உன் தாக்கம் என்னில் முழுமையாக
ஆக்கிரமித்துக்கொண்டு
உணர்வோடும், உயிரோடும் எம்மை
பிணைத்துக்கொள்ளும் தருணங்களை
நான் எவ்வாறு பழிகொடுப்பேன் கண்மணி....
******
உனக்கான அலைவரிசை
நான்தான் எனும்போது
இந்த தொலைவரிசை என்னை
ஒன்றும் செய்ய முடியாதுதான்....
இருந்தாலும்...
மனதின் ஓரம் உனக்கான ஈரக்கசிவு
என்னை தடுமாற வைக்கிறதே கண்மணி....
*******
சற்று தாமதமானாலும்
எனக்காக வரவேண்டும் முழுநிலவு
இன்னொருமுறை
அமவாசையானாலும் .....
உன் முகம் பார்த்து நான் விழிமூட.....
*******
கைப்பிடிக்க நானும்
கைகொடுக்க நீயும்
தயாராய் இருக்கும்போது
நமக்கான தருணங்களை
அமைத்துக்கொள்ள இன்னமும்
தாமதமென்ன கண்மணி....
*******
காத்திருக்கும் பூ கூட
காம்புடன் காத்திருக்கும் போது
என்னை மட்டும் வாசமாய் விட்டுவிட்டு
என் சுவாசத்தை எடுத்துக்கொண்டு போவதென்ன
கண்மணி ...
*******