உனக்காகவும் எனக்காகவும் இல்லாமல் எல்லாமே நமக்காகத்தான்.....என்று நானிருக்க...நடக்கும் நிகழ்வுகள் வேறாகத்தான் இருக்கிறது...
எல்லாமே என்னை கொஞ்சம் தடுமாற வைக்கிறது....மனதின் ஓரம் சின்ன குத்தீட்டி வலியாய்....
எல்லாமே எல்லாமும் என்று நினைத்துக்கொண்டு இதோ இந்த ரயில் உன்னைச் சேர்த்து ஓடிக்கொண்டிருக்கிறது ....
எனக்கான நிறுத்தம் இவ்வளவு சீக்கிரம் வருமென்று நான் எதிர்பாரக்கவில்லை ....
ஆனாலும் என் நிறுத்தத்தை நினைவுபடுத்திய உனக்கு என் நன்றி...
இழுத்துச்செல்லும் ரயில் வண்டியில் கடைசியாய் இறங்குவது நாமாகத்தான் இருக்குமென்று நினைத்திருந்தேன்....உன் வாய் தவறி அந்த வார்த்தையை சொல்லாதிருக்கும்வரை....
சொல்லிய வார்த்தையை நீயும் கேட்ட நானும் இல்லையென்று சொல்லமுடியாது....
நீ எப்படிப்பட்ட சூழ்நிலையில் அதை சொன்னாய் என்று எனக்குத்தெரியும்....இருந்தாலும் என்னால் அந்த சூழ்நிலையில் உன்னை கொண்டுவந்து நிறுத்தியிருக்கும் அந்த சக்தியை தடுக்க முடிய வில்லையே என்று தான் வருந்துகிறேன்...
உன்னை ஆகர்சப்படுத்தும் சக்தியாய் நானில்லையே என்றுதான் வருந்துகிறேன்...
பரவாயில்லை வாய் தவறும் ஒவ்வொன்றும் குற்றமில்லையே.....
என்னிடம்தானே சொன்னாய்....
Thursday, June 24, 2010
Wednesday, May 19, 2010
காத்திருத்தல்
நாம் இருவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர் அன்பு காட்டுவதில்...ஆனால் உன் மிதவாத தன்மைக்கு என் தீவிரவாதம் குடைபிடிக்கச் சொல்லும் தருணங்களை உருவாக்கி தருகிறதே நம் சூழல் அதைத்தான் என் எதிரி என்கின்றேன்....
அதற்காக நான் வருந்தவில்லை, ஆனால் என் ஏக்கத்தின் வெளிப்பாடுகளை சரியான விகிதத்தில் உன்னிடம் சொல்லமுடியாமல் எவ்வளவோ முறை தவித்திருக்கிறேன்.....
ஆனாலும் குறைந்தபாடில்லை என் தீவிரவாதம்.....அன்பைக்காட்டுவதில்....அதிகரித்துதான் இருக்கிறது உன் மிதவாதம்....
ஈரமான தருணங்களில் உன்னை கவர்ந்துகொள்ள என் கைகள் துடிக்க ஆனாலும் விலகித்தான் போகிறது உனக்கான நம் நெருக்கம்....
எதைக்கொண்டு என் அன்பைக்கட்டுவது, எதைக்கொண்டு என் உள்ளத்துடிப்பை உன்னிடம் பரிமாறிக்கொள்வது, நமக்கான ஆறுதல் எனக்காக உன் பேச்சிலும் உனக்காக என் பேச்சிலும் இருப்பதால்தான் இன்னமும் நடமாடிக்கொண்டிருகிறேன் ....
காதல் வாழ்க! அது படுத்தும் பாடு வாழ்க! உணர்ந்துகொண்டு உன்னைக்காதலிக்கவே விரும்புகிறேன்...
விழியில் விழுந்து என் இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே...
இரவும் பகலும் உரசிக்கொள்ளும் அன்பே பொழுதினில் வந்துவிடு...
அலைகள் உரசும் கரையினில் இருப்பேன் உயிரை திருப்பி தந்துவிடு...
உனக்கு மட்டும் கேட்கும் என் உயிர் உருகும் சத்தம்...
எனக்கு மட்டும் சொந்தம் உன் இதழ் கொடுக்கும் முத்தம்...
காத்திருக்கிறேன்......

Thursday, April 15, 2010
உனக்கொரு வேண்டுகோள்
உனக்காக எல்லாமே நான் தேடி தேடி செய்தாலும் ஏதோ ஒன்று உன்னில் நிறைவாய் இல்லையே எதும்மா.......
உனக்காக நான் எனக்காக நீ என்று வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை எது இடை மறித்தது....
நான் சுயநலம் பார்ப்பவன்தான் உன்னை பொருத்தமட்டில்....ஏனென்றால் என்னில் நீ எற்படுதிவிட்டுசென்ற ஏக்க சுவடுகளின் காயங்கள் இன்னமும் ஆறாத ரணமாய் என்னில் வலிக்கிறது....
தேடும்போது கிடைக்காத ஆறுதல், வேண்டும்போது கிடைக்காத சுகம்,எதிர்பார்க்கும்போது கிடைக்காத உன் அன்பு, நான் தேடும் அன்பை தரமுடியா நிலையில் இருக்கும் உன் வாழ்க்கை...
உனக்கே எதுவென்று தெரியாத நிலை, தேவைகளுக்காக உன்னை பயன்படுதிக்கொள்கிற உன்னைச் சுற்றி சூழ்ந்திருக்கும் கூட்டம்...
உன்னையே எதிர்பார்த்திருந்து காத்திருக்கும் உன் குருதி வழி தொப்புள்கொடி சொந்தம் எல்லாமே.....இதில் எதை நீ எனக்காக தருவாய் என்று தெரியாமலே பார்த்திருக்கும் நான்...
என்னை எவ்விதமாயினும் திருப்திப்படுத்த நீ படும் பாடு....அதனால் உடைந்து விழும் நம் அன்பு சிறகுகள்
நம் இருவருக்கும் ஒன்றையொன்று நம்மை காப்பற்றுவதிலே செலவழித்த நாட்கள் .....ஓடிய மாதங்கள்...
இருந்தாலும் ஏதோ ஒர்விதத்தில் ஏதோ ஓர் இடத்தில கட்டுப்பட்டே இருக்கிறோம் நமக்கே தெரியாமல்....
உன்னில் என் உணர்வை, என் இருப்பை நிறைவாய் உணர்த்தவே நான் விரும்புகிறேன்....அவ்வாறு இருக்கிறேன் என்று நான் உணரும் நேரத்தில் ஏதோ ஒரு விதத்தில் நீ கட்டுப்பட்டு எங்கோ இருளில் மறைந்துவிடுகிறாய் உனக்கெனவே நான் இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு....
இதோ தேவையில்லாத விவாதங்கள்...உன்னால் கட்டுக்குள் கொண்டுவரமுடியும் என்ற விஷயத்தை உன் பெருமைக்காக சொல்லப்போய் உடைந்ததுதான் மிச்சம் நீயும் நானும்...
முதலிலேயே உன்னிடம் சொல்லியும் இருக்கிறேன் உன்னால் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்று....ஆனால் நீ கொடுக்கும் இடத்தில் அவைகளுக்கு சாதகமாக உன் இருப்பு போய்விட்டதே என்றுதான் வருந்துகிறேன்...ஆனால் நீயோ.....
எதை வேண்டாம் என்று சொல்கிறேனோ அதைத்தான் உன்னால் தவிர்க்கமுடியாமல் போகிறது...முன்பே நான் சொன்னமாதிரி நீ செய்திருந்தால் அவைகள் உன்னை விட்டு விலகித்தானே செல்லும்....
ஆனாலும் நீ கொடுக்கும் இடத்தையே உத்திரவாதமாக பயன்படுத்திக்கொள்ளும் உரிமை யார் கொடுத்தது...
தாளமுடியாமல் நான் கேட்டால் கோபம் கொள்கிறாய், இல்லை என்னையே சந்தேகப்படுகிறாயா என்று மனதுடைந்து கேட்கிறாய்...
எனக்கான நீ என்னிலிருக்க உன் வழியாகவே சாதித்துக்கொள்ளும் அவைகளுக்கு நீ வேண்டுமானால் வக்காலத்து வாங்கலாம்...நான் ஏன் சும்மா இருக்கவேண்டும் சொல்..
அதற்காக நீ கையில் எடுத்திருக்கும் ஆயுதம் நம் உணர்வுகளை மேலும் மேலும் புண்படுத்துமே தவிர சரி செய்யாது...
நீ நீயாகவே அவைகளை வெல்ல வேண்டும்.....விட்டுகொடுக்காமல் அவைகளுக்கு நீ உணர்த்தவேண்டும் நீ அவ்வாறில்லை என்று....
இல்லையென்றால்....என்ன நடக்கும் என்று உனக்கு தெரிந்துதான் இருக்கும்...
காலத்தே களைகளை களையாவிட்டால் பயிர் செய்து என்ன பயன்....

Subscribe to:
Posts (Atom)