உள்ளம் என்பது ஆமை
அதில் உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி
நெஞ்சில் தூங்கி கிடப்பது மீதி...
உள்ளம் என்பது ஆமை ....
*******
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
உள்ளம் என்பது ஆமை....
*******
தண்ணீர் தணல் போல் தெரியும்
செந்தனளும் நீர் போல் குளிரும்
நண்பனும் பகை போல் தெரியும்
அது நாள்பட நாள்பட புரியும்.....
உள்ளம் என்பது ஆமை .....
********
No comments:
Post a Comment