Saturday, June 6, 2009

கவர்ந்த பாடல்

குடிப்பதற்கு ஒரு மனமிருந்தால் அவளை
மறந்து விடலாம்....
அவளை மறப்பதற்கு ஒரு மனமிருந்தால்
குடித்து விடலாம் ....
ஆனால் இருப்பதோ ஒரு மனம்...ஒரு மனம் ...
என்ன செய்வேன்...என்ன செய்வேன்...
******


இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று

இரண்டு மனம் வேண்டும்....

******

இரவும் பகலும் இரண்டானால்

இன்பமும் துன்பமும் இரண்டானால்

உறவும் பிரிவும் இரண்டானால்

உள்ளம் ஒன்று போதாதே....

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ...

இரண்டு மனம் வேண்டும்....

**********

கண்களின் தண்டனை காட்சி வழி

காட்சியின் தண்டனை காதல் வழி

காதலின் தண்டனை கடவுள் வழி

அந்த கடவுளை தண்டிக்க என்ன வழி

இரண்டு மனம் வேண்டும்

இறைவனிடம் கேட்பேன்

நினைத்து வாழ ஒன்று

மறந்து வாழ ஒன்று ....

********

No comments:

Post a Comment