Friday, June 12, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 12

ஒவ்வொரு முறையும் நீ என்னை பார்க்கும் போது என்னோடு பேசமாட்டாயா என்னுடனே வந்துவிடு என்று கூப்பிடமாட்டாயா என்றுதான் மனது ஏங்குகிறது ......
குறைந்தபட்சம் உன் கைகளை என்கைகளோடு பிணைத்துக்கொள்ள மாட்டாயா என்று எதிர்பார்கிறது .....
சூழல் அமைவதில்லை...அமைந்தாலும் நீ சந்திக்கும் பிரச்சனைகளின் வீரியம் அந்த நினைவை மறக்கச் செய்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது ......
நானும் எதிர்பார்ப்பை குறையாமல் அனுதினமும் உன்னிடம் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கிறேன் .......
உன் தொடுதல் இல்லாத அரவணைப்பு என்னை உன் மீதான ஏக்கத்தை அதிகமாக்கிக் கொண்டிருக்கிறது ......
ஒருமுறையேனும் என்னை அணைத்து உச்சி நுகர மாட்டாயா .....
ஒரு முறையேனும் என் கைப்பிடித்து உன் கைகளுக்குள் சிறை வைக்கமாட்டாயா ....
ஒரு முறையேனும் என்னை ஏந்திக் கொள்ளமாட்டாயா .....
ஒரு முறையேனும் என்னை ........
இப்பொழுதெல்லாம் நம் கைகள் கட்டப்பட்டே இருக்கின்றன
ஏக்க பெருமூச்சாய் என் மூச்சு உன்னைச் சுடவில்லையா ....

No comments:

Post a Comment