Saturday, December 12, 2009

அன்புள்ள.....

அன்புள்ள....

உன்னை என்னவென்று அழைப்பது.....யாதுமாகி என்னில் நிற்கின்றாய்....நீ என்பது நான்.... நான் என்பது நீ.....சரிதானே நான் சொல்வது.....உன் அருகாமைக்காக என்மனது ஏங்கித் தவிக்கிறது....அன்புள்ள என்றுதான் உன்னை அழைக்கத் தோன்றுகிறது....நீயே அன்பாக இருப்பதால்.....நீ கொடுத்துவிட்டுச் சென்ற முத்தத்தின் மீதம் என்னில் இருக்கிறது எப்போது வந்து எடுத்துச் செல்வாய்...என்னை உன்னில் அழுத்திக்கொள்வாய்

நானும் உனக்காக உன் அருகாமைக்காக தவமாய் தவம் இருக்கிறேன் தவிப்புடன் உன்னை என்னில் வரித்துக்கொள்ள...ஆனாலும் நீ அவர்களுக்கு தேவையாய் இருக்கிறாய் ஏதோ ஒரு விதத்தில்.....என்னில் ஏக்கத்தில் இருந்து, என் உலகத்தில் இருந்து, என்னில் இருந்து வேறுபட்டு....

இருந்தாலும் இந்த இடைவெளி காலத்தின் கட்டாயம்.....இந்த கட்டாயத்தை இல்லாமல் செய்துவிடமுடியாதா மனம் கேட்கிறது...பதில்தான் என்ன...