Tuesday, March 31, 2009

வாழ்த்து மடல்

உன் உறவுடனான
உணர்வுப் பரிமாறல்கள்
முடிந்தவுடன்
இதையும் கொஞ்சம் படி
என் நண்பனே
****
இந்த பூவும் விற்பனைக்கல்ல
வாசம் வீசும் பூக்களில்
இது வாழுகின்ற பூ
சாதாரண பூ
****
நினைவுகளின் அலையில்
உன் நிலைத்த உறவோடு
கைகோர்த்து நீண்டதொரு பயணம்
செய்யும் என் நண்பனே !
இதையும் கொஞ்சம் படி !
****
நிமிர்ந்து நில் !
நேர்கொண்டு அழை !
பணிவோடு பேசு !
பண்போடு பழகு !
நிலைத்திருக்கும்
உன் வாழ்க்கை !
****

No comments:

Post a Comment