உனக்கான இடத்தைக்கூட
என்னால் தொட்டு பார்க்க முடியாதபோது
எதைப்பார்த்து பரிமாறிக்கொள்வோம் நம்
காதலை
மனமே நீயே சொல் !
*****
தினமும் உனது கைபேசி அழைப்பை
எதிர்பார்த்து பூத்துபோகிறது என் மனம்
எதிர்பாரா தருணங்களில் அலறும் என் கைபேசி
உனது அழைபென்றே தெரியாமல்
அமைதி ஆகிறதே !
ஆறாத என் மனதை
அறியுமா உன் மனம் !
*****
என்று வரும் விடிவு காலம்
என்று வியர்வை தருணங்களில்
விழித்திருக்கும் என் மனதை
அறியுமா உன் மனம் !
*****
இதுவென்றே தெரியாமல் ஓடும்
நாட்களை நாட்காட்டிதான்
தெரியபடுத்துகிறது
தெரிந்து கொள்ளுமா உன் மனம் !
சொல் என் மனமே !
*****
No comments:
Post a Comment