Tuesday, March 31, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 3

நான் சொல்லும் காரணங்களை நீ எடுத்துக்கொள்ளும் விதத்தில் மாறுபடும் போது உன்மனம் படும் பாடு பார்த்து என்மனம் அழுதுகொண்டே இருக்கிறது ......

புரியாமை ஒருபுறம் இருக்க....என்ன காரணத்தினாலோ நீ படும் வேதனை என்னை சற்றேனும் யோசிக்க வைத்ததுண்டு.....

கவலைபடாமல் உன்னை கவலைப்படவைக்கிறேனே என்றுதான் என்மனம் கவலைப்படுகிறது......

இருந்தாலும் எனக்கான ஆற்றாமை எதன் மூலம் வெளிப்படும் என்றே தெயரியாமல் உன்னை குத்திக்கிழித்துக்கொண்டிருகிறேன்.....

வெளிப்பார்வைக்குத் தெரியாமல் உள்ளுக்குள் உன்னை நினைத்தே உருகிக்கொண்டிருகிறேன் ....

இனியேனும் என்னை மாற்றிக் கொள்ள முயல்கிறேன் .......உன் நினைப்பை தவிர்த்து...

கவிதையாய் பார்த்து கவிதையாய் சிரித்து கவிதையாலேயே உன்னை காயப்படுத்துகிறேன்....

இருக்கட்டும் உன்புன்னகை பார்த்து என்னை நானே ஆற்றிக்கொள்கிறேன் .....புரியாத நிமிடங்களுக்காக நான் வெட்கப்படுகிறேன்...

இனிமேலும் என் மனதால் உன் மனது கிழியாமல் பார்த்துக்கொள்கிறேன்....

பயமின்றி நீ என் பக்கம் வரலாம்

என்னைப்பார்த்து உன் மனதைத்திறந்து காட்டலாம் ....

கொஞ்சம் அழுகாமல் என்னைப்பார்த்துச் சிரித்துவிட்டுப்போ !

உன்கவலை மறந்து....

உனக்கான கவலைகளை பட்டியல் இட்டு என்மனதிடம் ஒப்புவித்துவிடு பார்த்துக்கொள்கிறேன் நானா அதுவா என்று !

என்னோடவே போகட்டும் உன் கவலைகள்

இனி உன் வாழ்நாளெல்லாம் வசந்தமே வீசட்டும்....என் உயிர் காற்றாய்.....

No comments:

Post a Comment