Tuesday, March 31, 2009

என் உயிருக்கு ஓர் கடிதம் - 2

என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் என்பக்கம் வரவேமாட்டேன் என்று மனதாலும் உடலாலும் உன்னையே தியானிக்கும் என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிடாய் ?

அலைமோதும் என் எண்ணங்களின் பிரதிபலிப்பு உனக்கு தெரிகிறதா.....உயிரின் ஓசையாய்....

உனக்கான உணர்வு கொந்தளிப்பாய் என்மனம் உன்பின்னே சுற்றுவது உனக்கு தெரியவில்லையா?

நீ எது சொன்னாலும் எனக்கான இடத்தையே நிச்சயித்து என் மனம் எண்ணிப்பார்கிறது

நீ எதை நினைத்தாலும் என்னையே நினைக்கவேண்டும் என என் மனம் விரும்புகிறது...

உன்னிடம் நான் எதிர்பார்பது உன் காதல் ஒன்றேதான் !

அதுவன்றி ஓரணுவும் என்னில் அசையாது!

அதுவுமில்லாமல் நான் இருந்துதான் என்ன பயன் ?

No comments:

Post a Comment