நீ தேடும்போது நான் மட்டும்
உன்னோடு இருக்கையில்
நீ மட்டும் ஏனோ தானே
வரவேற்கிறாய் வேதனைகளை
ஏனோ எனக்கு வலிகளாகத் தருகிறாய்
******
உன்னைத்தான் நான் என் எல்லை
என்றிருக்க.....
என் எல்லை ஏனோ என்னைத்தாண்டி
போகிறது
என்னை விட்டு தூரமாய்
*****
உயிர் வாழும் கொஞ்சகாலம்
உனக்கு நான் உண்மையாய் இருக்கும்
சந்தோசம் தரமாட்டாயா என் அன்பே
என்னை தவிக்கவிட்டு
என் அன்பை உதறி விட்டு
உணர்வுக்கு அடிமையாய் போவதென்ன
என் நெஞ்சம் உன்னைக் கண்டு நோவதென்ன ....
*****
காலம் ஒரு நாள் மாறும்
என் கவலைகள் யாவும் தீரும்
என்றிருக்க
என்னை ஏந்திழையாள்
ஏக்கம் கொள்ள செய்வதென்ன
*******
கனவில் நினையாத
காலம் இடைவந்து
நம்மைப் பிரித்தாளும்
ஆலமரக்கிளையில்
ஆடி வந்த அன்றில் பறவை
ஒன்றை விட்டு ஒன்று உயிர் வாழாது
காணாமல் உயிர் போகாது...
*******
இந்தக்குயில் பாடும்
உயிருடனும்
சாகவரமாய் காதலுடனும்
உனக்காக
பாடுவதில் அதற்கு சந்தோசம்தான்
********
No comments:
Post a Comment